“மாமன்னன்” படத்தை பார்த்து கமல் கொடுத்த ரியாக்ஷன்.? ஆடிப்போன இயக்குனர் செல்வராஜ்

kamal
kamal

இளம் இயக்குனர்கள் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து அசத்து வருகிறார் இவர் முதலில் பரியேறும் பெருமாள் என்னும் படத்தை எடுத்து ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் வாங்கினார்.

அதனை தொடர்ந்து இவர் எடுத்த கர்ணன் திரைப்படம் அதிர்வு திரி ஹிட் அடித்தது இந்தப் படத்திற்கு பிறகு அவருடைய சினிமா கேரியர் உச்சத்தை தொட்டது. இதனால் டாப் நடிகர்கள் மாரி செல்வராஜிடம் கதை கேட்க அதிகம் ஆர்வம் காட்டினார். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் உடன் முதல் முறையாக கைகோர்த்து  “மாமன்னன்” என்னும் திரைப்படத்தை எடுத்து உள்ளார்.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து நடிப்பு அரக்கன் பகத் பாஸில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பல முன்னணி ஜாம்பவான்கள் நடித்து உள்ளனர் ஒரு வழியாக ஷூட்டிங் நிறைவு பெற்று அண்மையில் இசை வெளியீட்டு விழா கோளாக்கலமாக நடைபெற்றது இதில் பல  முன்னணி பிரபலங்கள் விருந்தினராக வந்து கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து மாமன்னன் திரைப்படம் குறித்து ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

அதாவது படம் வெளிவருவதற்கு முன்பாகவே நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் மாமன்னன் திரைப்படத்தை போட்டு காண்பித்து உள்ளனர். மாமன்னன் படத்தை முழுவதுமாக பார்த்த நடிகர் கமல் வெளியே வந்து இயக்குனர் மாரி செல்வராஜ் கையைப் பிடித்து வாழ்த்தினாராம்..

அப்போது மாரி செல்வராஜை ரொம்ப எமோஷனலாக இருந்தாராம். மேலும் அப்பொழுது அவருடைய கை, கால்கள் நடுங்கியதாக அவரே வெளிப்படையாக கூறி இருந்தார் இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.