Jayam ravi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2போன்ற படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயம் ரவி கைவசம் இறைவன், சைரன் ஆகிய படங்கள் இருக்கின்றன.
இந்த இரண்டு திரைப்படங்களுமே ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது இன்று ஜெயம் ரவியின் 43-வது பிறந்தநாள் முன்னிட்டு சைரன் படக்குழு டீசரை வெளியிட்டது அதில் ஜெயம் ரவி வயதான தோற்றத்தில் தெரிகிறார் மேலும் படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் ஆக்சன் கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு படங்கள் மாபெரும் வெற்றி பெறும் பட்சத்தில் அவருடைய மார்க்கெட் உயர்வதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து வித்தியாசமான படங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவருடைய பிறந்தநாள் என்பதால் ஜெயம் ரவி பற்றிய புதிய மற்றும் பழைய தகவல்கள் வெளி வருகின்றன. நடிகர் ஜெயம் ரவி சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல் சாரை..
உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று எங்களுக்கு தெரியும். கமல் சார் படத்தை ரீமேக் பண்ணனும் என்று நினைத்தால் எந்த படத்தை பண்ணுவீங்க என கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி “மைக்கேல் மதன காமராஜன்” படத்தை தான் என கூறினார் அந்த படத்தை மற்றும் 50 தடவை பார்த்திருப்பேன் என கூறி உள்ளார்.
ஜெயம் ரவிக்கு மட்டும் மைக்கேல் மதன காமராஜன் ஒரு ஃபேவரைட் படம் இல்ல பல நடிகர்களுக்கு ஃபேவரைட் படமாக இருந்து வருகிறது ஏனென்றால் அத்தனை கதாபாத்திரங்களில் எப்படி கமலால் நடிக்க முடிந்தது ஒவ்வொரு கதாபாத்திரமே வேறு வேறு ஸ்டைலில் இருக்கும் இது நடிப்பது ஈசி இல்லை என பலரும் புகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.