90 காலக்கட்டத்தில் இருந்து தனது பயணத்தை தொடர்ந்து இப்போது வரை உலகநாயகன் கமலஹாசன் வரையிலும் சினிமா உலகில் வலம் வருகின்றார் இவர் நடிப்பில் இதுவரை பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளது மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு இவர் பல்வேறு விதமான கெட்டப்புகளை போட்டு விருந்து கொடுத்தவர் உலகநாயகன் கமலஹாசன்.
இவர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஆளவந்தான் இந்த திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இருந்தார் உலகநாயகன் கமலஹாசன் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளவந்தான் படத்தில் உலகநாயகன் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ரவீனா டாடன் என்பவர் சிறந்த பங்களிப்பை கொடுத்து படத்திற்கு பலம் கொடுத்திருந்தார் ஆளவந்தான் திரைப்படம் அப்போது மிகப்பெரிய வரவேற்பு சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பை பெறவில்லை
என்றாலும் தற்போது இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தான் இருக்கிறது. ஏனென்றால் இதில் கமல் நடிப்பு வேற லெவல் இருந்திருக்கும் இந்த படம் ஒரு புத்தகத்தை தழுவி தான் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளிவருகிறது.
ஆம் உலக நாயகன் கமலஹாசனின் ஆளவந்தான் படம் தாயகம் என்னும் புத்தகத்தை மையமாக வைத்துதான் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன தாயகம் புத்தகத்தை கமல்ஹாசன் 1984ஆம் ஆண்டு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது அதை வைத்துதான் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.