தமிழ் சினிமாவில் சுருதிஹாசன் அவர்கள் தனது அப்பாவான கமலஹாசன் நடிப்பில் வெளியான ஹேராம் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதன் பிறகு நடிகை சுருதி ஹசன் ஹிந்தி படத்தில் அறிமுகமானார். பின்னர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு சிறிது காலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்த சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் நடித்து வந்தார் அதன் பிறகு நடிகை சுருதிஹாசன் தனத காதலரை அறிமுகம் செய்தார் அதுமட்டுமல்லாமல் தனது காதலர் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரல் ஆனது.
அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் தற்போது வேறு ஒரு நபரை காதலித்து வருகிறார் நடிகை சுருதிஹாசன் இவர்கள் இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வருகின்றனர் அது மட்டுமல்லாமல் இவர்களது புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது இதுவும் தற்போது வைரலாகி வருகிறது. ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நடிகை சுருதிஹாசன் தற்போது மூக்கை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதைப் பற்றி பேசிய சுருதிஹாசன் ஆமாம் நான் மூக்கை அறுவை சிகிச்சை செய்தேன் என்னுடன் உடலை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் உங்கள் உடலில் நீங்களும் எது வேணாலும் செய்யுங்கள் எனக்கு அத பத்தி கவலை கிடையாது ஏன் என்னுடைய வாழ்க்கையில் மூக்கை நுழைக்கிறீர்கள் என்று தடாலடியாக பதில் அளித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் எதற்காக முழுக்க அறுவை சிகிச்சை செய்தேன் என்ற விளக்கமும் அளித்துள்ளார் அதாவது என்னுடைய மூக்கு உடைந்த காரணத்தால் நான் எனது மூக்கை அறுவை சிகிச்சை செய்தேன் என்று கூறியுள்ளார். அவர் அளித்த இந்த பதில் தற்போது இணையத்தில் வெளியாகிய செம்ம வைரலாக பரவி வருகிறது.