உலகநாயகன் என்ற பட்டத்தோடு ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்தான் கமல்ஹாசன் இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறார் என்று தான் கூற வேண்டும் மேலும் இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பகத் பாசில்,விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
பொதுவாகவே கமல்ஹாசன் நடிக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் அதிலும் குறிப்பாக விக்ரம் திரைப்படத்தில் இவர் நடித்து வருவதால் இந்த திரைப்படத்தை பல சினிமா பிரபலங்களும் எதிர்பார்த்து வருகிறார்கள் மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதை தவிர்த்து பார்த்தால் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்குகிறார் மேலும் திரைப்படங்கள் மற்றும் அரசியலில் ஈடுபடுவது போன்ற பல விஷயங்களில் இவர் அதிக ஆர்வம் காட்டி நேரங்களை செலவழித்து வருவதால் அவரை ரசிகர்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது ஆனால் நவம்பர் ஏழாம் ஆம் தேதி கொண்டாட உள்ள உலக நாயகன் கமலின் பிறந்தநாள் முன்னாடியே விக்ரம் பட குழு கொண்டாடியுள்ளனர் அதற்கான புகைப்படங்களும் தற்போது கிடைத்துள்ளது.ஆம் விக்ரம் படக்குழு தற்போது முன்னதாகவே இவரது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்கள்.
ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் எதற்காக கமலின் பிறந்த நாள் முன்னதாகவே கொண்டாடப் பட்டுள்ளது என்று பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.