kamalhasan in the story of Superstar: சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக நிறுத்திவைககப்பட்டுள்ளது.
மேலும் தற்போது ரஜினி அவர்கள் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. இந்த படத்தின் கதையை கேட்டு ரஜினி அவர்கள் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கதையில் சில மாற்றங்களை கொண்டுவருமாறும் ரஜினி கூறியுள்ளார். இந்த படத்தை உலக நாயகன் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை முடித்தவுடன் சூப்பர் ஸ்டாரை சந்தித்து சிறு மாற்றங்களுடன் கதையை கூறி உள்ளார். ஆனால் சூப்பர் ஸ்டாருக்கு கதை பிடிக்காததால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
பின் இதே கதையை லோகேஷ் கனகராஜ் கமலஹாசனிடம் கூறிய போது அவருக்கு கதை பிடித்து விட்டதாம். பின் தானே இந்த படத்தில் நடிப்பதாக அவர் ஒத்துக் கொண்டாராம். இந்த கதையை ரஜினியிடம் கூறும்போது ரஜினி கமலிடம் இந்தப் படத்துக்கு சம்பளமாக 100 கோடி கேட்டாராம். இதனால் ரஜினிக்கும் கமலுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.