தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்துடன் துணிவு திரைப்படம் ஒரே தினத்தில் மோத இருக்கிறது.
இந்த நிலையில் வாரிசு திரைப்படம் மிகப் பிரமாண்டமாக பிரமோஷன் பணிகளை செய்து வருகிறது. மேலும் வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களை பட குழு வெளியிட்டு இருக்கிறது ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலையும் தீ தளபதி பாடலையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா பாடலை மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள் இந்த நிலையில் இரண்டாவது பாடலை விரைவில் வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது மேலும் அந்த இரண்டாவது சிங்கிள் பாடல் காசேதான் கடவுளடா எனத் தொடங்க இருக்கிறதாக ஜிப்ரான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
பல வருடங்கள் கழித்து விஜய் அஜித் படங்கள் ஒரே தினத்தில் மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.
மேலும் தளபதி 67 திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனவரி மாதத்தில் இருந்து வெளியிடப்படும் என லோகேஷ் கனகராஜ் பலபேட்டிகளில் கூறி வருகிறார். இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கிறார் என்று உறுதியாகி இருக்கிறது மேலும் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் கமல் அவர்கள் நடிக்கிறார் என்று தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் த்ரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோர் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.
மேலும் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஷாலை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் பேசியதாகவும் ஆனால் விஷால் அவர்களால் வேறொரு திரைப்படங்களில் கமிட் ஆனதால் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதையும் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.
ஆனால் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் கமல் நடிக்க இருக்கிறது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது இதை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இந்த படத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தின் தொடர்ச்சி கதை தான் என உறுதியாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி வருகின்றனர்.
ஏற்கனவே தளபதி 67 திரைப்படம் எல்சியுவில் இணைகிறது என்ற தகவல் பரவி வருகிறது அதுமட்டுமில்லாமல் தளபதி 67 திரைப்படத்தின் கதை கைதி மற்றும் விக்ரம் படத்தின் தொடர்ச்சி கதை தான் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் தளபதி 67 திரைப்படத்தின் நடித்தால் கைதி, விக்ரம், தளபதி 67, ஆகிய மூன்று படங்களும் ஒரே படமாக எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அப்படி அந்த மூன்று படங்களை ஒரே படமாக எடுத்தால் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.