நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் இதுவரை 250க்கும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் ஏன் இவர் கடைசியாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து கமல் ந நடித்த விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது.
இந்தப் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் கிடப்பில் இருந்த இந்தியன் 2 படத்தில் நடிகர் திட்டமிட்டுள்ளார். தற்போது இந்த படத்தின் சூட்டிங் மற்ற நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது இந்தியன் 2 படத்தில் கமலை தவிர பிரியா பாவானி சங்கர், காஜல் அகர்வால், சித்தார்த்த, ராகுல் பிரத் சிங், பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ்.
மற்றும் சமுத்திரகனி, டெல்லி கணேஷ், ஜார்ஜ் மரியன், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மனோபாலா, ஆடுகளம் நரேன், ஸ்யாம் பிரசாத் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்தியன் 2 படத்தில் கமலுக்கான போர்ஷன் எப்பொழுது எடுப்பீர்கள் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
இந்தியன் 2 படத்திற்கு ரெடியாக உலக நாயகன் கமலஹாசன் அமெரிக்கா சென்று அண்மையில் தான் சென்னை திரும்பினார். இந்த நிலையில் இந்தியா 2 படப்பிடிப்பு தளத்திற்கு இன்று கமல் இயக்குனர் ஷங்கரை சந்தித்து இந்தியன் 2 படம் குறித்து விவாதித்துப் பேசி உள்ளனர். அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு வழியாக இந்தியன் 2 படத்தில் கலந்து கொண்டீர்கள் சந்தோஷம் என கூறி கமெண்ட்டுகளையும், லைக்களையும் போட்டு வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை.. இந்தப் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் தேவர்மகன் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் நடிப்பார் என ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது.
#Indian2 from today.
@Udhaystalin @shankarshanmugh @LycaProductions @RedGiantMovies_ pic.twitter.com/TsI4LR6caE— Kamal Haasan (@ikamalhaasan) September 22, 2022