கமல் நடிக்க ஆரம்பித்து விட்டால் போதும் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்.? குறிப்பாக பணம் – உண்மையை உடைக்கும் பிரபலம்.!

kamal-
kamal-

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனது நடிப்பு திறமையை அதில் சிறப்பாக வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருபவர் உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது விக்ரம் படத்தில கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் கௌரவ வேடத்தில் சூர்யா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே விக்ரம் படத்தில் நடித்து உள்ளது.

தொடர்ந்து கமல் மற்றும் விக்ரம் படம் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனரும் நடிகருமான சந்தன பாரதி நடிகர் கமல் குறித்து சில தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.

கமலஹாசனின் ஐந்து வருட நண்பரான சந்தானபாரதி இயக்கத்தில் இதுவரை குணா மகாநதி போன்ற படங்களில் கமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் சந்தன பாரதி பேசியது கமல்ஹாசன் பணத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார் அவருக்கு படமும் காட்சியும் தான் ரொம்ப முக்கியம் அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்.

kamal and santhana bharathi
kamal and santhana bharathi

அந்த அளவிற்கு சினிமாவின் மேல் காதல் கொண்டு உள்ளார் என கூறினார். படத்தின் கதை சிறப்பாக அமைந்து விட்டால் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பிலும் சரி பண விஷயத்திலும் சரி எதையும் பார்க்க மாட்டார்கள் என பல இயக்குனர்களும் நடிகர்களும் சொல்லிவந்தனர் அதை தற்போது கமல்ஹாசனின் நண்பர் சந்தானபாரதி உறுதிப்படுத்தி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.