நடிப்பிற்கு பெயர் போனவர் சிவாஜி கணேசன். அவருக்கு பிறகு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் உலக நாயகன் கமலஹாசன் தான். இவர் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஒருவழியாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையை அவருக்கு ரொம்ப பிடித்து போகவே விக்ரம் படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார்
அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் தேவர்மகன் 2, இந்தியன் 2 போன்ற படங்களில் நடிகர் ரெடியாக இருக்கிறார்.
முதலாவதாக இந்தியன் 2 நடிப்பார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாதியில் கிடப்பதால் அதை முடிக்கவே முதலில் கமல் ஆர்வம் காட்டுவார் என கூறப்படுகிறது.இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கமல் குறித்து சில விஷயத்தை பகிர்ந்து உள்ளார் நடிகை ஊர்வசி. இவர் நடிகர் கமலுடன் கைகோர்த்து மைக்கேல் மதன காமராஜ் திரைப்படத்தில் ஒரு கமலுக்கு ஹீரோயின்னாக நடித்து அசத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஊர்வசி கமல் அண்மையில் பேட்டி ஒன்றில் சொன்னது : கமலுக்கு ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும் போது அந்த வேலையில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் அதற்காக மிகவும் கோபப்படுவார் அப்புறம் பார்த்துக்கலாம், டேக்ல பார்த்துக்கலாம் என கூறினாலும் ரொம்பவும் கோபப்படுவார்.
ஒரு இடத்தில் இருந்து குதிக்க சொன்னாலும் 10 தடவை டேக்கு வந்தாலும் 10 தடவை அங்கிருந்து குதிப்பார் அவர் எப்பொழுதுமே ஒரு விஷயத்தை ஆர்வமில்லாமல் செய்ததே கிடையாது மிக அற்புதமான மனிதர் திறமைசாலி என கமலை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.