ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியதற்காக சூர்யாவுக்கு தனது சொந்த ROLEX வாட்ச்சை கழற்றி கொடுத்த கமல் – இதை பார்த்தா உங்களுக்கே புரியும்.!

surya
surya

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வது வழக்கம் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை பிடித்துப் போகவே உடனடியாக அந்த படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார்.

உறுதியாக இந்த திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க போதைப்பொருள் மற்றும் தனது பேரக் குழந்தையை எப்படி மீட்டு எடுக்கிறார் என்பது தான் படத்தின் முழு கதை இந்த கதை வித்தியாசமாக இருந்ததால் மக்களுக்கு ரொம்ப பிடித்து போய் தற்போது வெற்றிகரமாக ஓடுகிறது.

இது வரை மட்டுமே 250 கோடிக்கு மேல் வசூலில் புதிய சாதனை படைத்து உள்ளது விக்ரம் திரைப்படம். விக்ரம் படம் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்துகிறது. கமல் கேரியரில் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இது அமைந்துள்ளதால் உலகநாயகன் கமலஹாசன்.

தொடர்ந்து இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்து அசத்தி வருகிறார். முதலாவதாக உதவி இயக்குனர் 13 பேருக்கு அப்பாச்சி பைக்கை கொடுத்தார் அவர்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜூக்கு 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தினார்.

surya
surya

அதன் பிறகு விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து அவருக்கு 20 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது உண்மை என்னவென்றால் நடிகர் சூர்யாவை சந்திக்கும்போது கமல் கையில் அணிந்திருந்த வாட்சை சூர்யாவுக்கு கொடுத்து விட்டு திரும்பி வரும் பொழுது கமல் கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கமல் பயன்படுத்திய அந்த வாட்சை தான்  சூர்யாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார் என்பது தெரியவருகிறது.