சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் பலரும் எடுத்தவுடனேயே டாப் நடிகர் நடிகைகளுக்கு கதை கூறி சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக மாறுகின்றனர் அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் .
இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி மற்றும் விஜய்யுடன் மாஸ்டர் போன்ற ஆக்சன் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்து உலக நாயகன் கமலஹாசனுக்கு ஒரு ஆக்சன் கதையைக் கூற அவருக்கும் அந்த கதை பிடித்துப்போக விக்ரம் என்னும் படம் உருவாகிறது.
இந்த படத்தை பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழில் இதுவரை வெளிவந்த படங்களின் வசூலை முந்தி விக்ரம் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அதனால் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் நடிகர்கள் என பலருக்கும் பரிசுகளை அள்ளி வழங்கி வருகிறார். இந்த நிலையில் விக்ரம் படம் வெளியாகி 7 நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது ஒரு வாரத்தில் விக்ரம் படம் ஈட்டிய ஒட்டு மொத்த வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி உலக அளவில் இந்த படம் இதுவரை 260 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் வெறும் ஏழே நாட்களில் இவ்வளவு வசூல் செய்தது விக்ரம்படம் மட்டும் தான் எனவும் கூறி வருகின்றனர். இன்னும் ஒரே வாரத்தில் 300 கோடியைத் தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.