சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்தது தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த பொழுதிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இந்த படத்தை தொடர்ந்து சிறு இடைவெளிக்கு பிறகு ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர்.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாக்கி வருகிறது ரஜினி உடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், கர்நாடகா டாப் ஹீரோ சிவராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி, கமல் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 1980 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடிடித்த திரைப்படம் முரட்டுக்காளை.
இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ஜெய்சங்கர், சுருளிராஜன், ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ அசோகன், தேங்காய் சீனிவாசன், ஜி சீனிவாசன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த படம் வெளிவந்து ரஜினிகாந்த் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறியது. ஆனால் உண்மையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒருவர் தானாம்..
அது வேறு யாரும் அல்ல உலகநாயகன் கமலஹாசன் தான். இயக்குனர் எஸ் பி முத்துராமலிங்கம் கமலை நடிக்க வைக்க அதிகம் ஆர்வம் காட்டினார். ஆனால் அப்பொழுது அவர் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் கிடைக்காமல் போக வேறு வழி இல்லாமல் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினியை நடிக்க வைத்தாராம். இந்தத் தகவல் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.