தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ் இவர் இதுவரை மாநகரம் கைதி மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தை எடுத்தார்.
இந்த படம் சூப்பர் ஹிட் படமாக மாறி தற்பொழுதும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகநாயகன் கமலஹாசன் சமீபகாலமாக சினிமா பக்கம் தென்படாமல் இருந்து வந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் கதையை கூற அந்த கதை கமலுக்கு ரொம்ப பிடித்துப் போகவே..
இந்த படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார். இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா, நரேன், காயத்திரி, ஏஜென்ட் டினா என பலரும்.. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் ஒருவழியாக ஜூன் மூன்றாம் தேதி.
வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாகவே வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது. கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு திரைப்படமும் மிக பிரம்மாண்ட வசூல் அள்ளவில்லை. ஆனால் தற்போது உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படம் அதை நிகழ்த்தி உள்ளது.
இதுவரை கமலின் விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு குறையாமல் இருப்பதால் நிச்சயம் விக்ரம் திரைப்படம் 500 கோடி கிளப்பில் இணையும் என பலரும் கூறி வருகின்றனர் இதனால் படக்குழு மற்றும் கமல் ரொம்ப சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.