68 வயதில் உயிரைக் கொடுத்து நடிக்கும் கமல்..! எல்லாம் இந்த ஒரே ஒரு படத்திற்காக தான்..!

kamal
kamal

நடிகர் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது தன்னுடைய இந்தியன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட பின்பு தற்போது தான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர் கதையாகவே இந்த திரைப்படம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தின் கதை ஆசிரியர் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் இந்தியன் 2 திரைப்படத்தில் இந்தியன் தாத்தாவாக நடிக்கும் கமலஹாசனுக்கு ஹைடெக் மேக்கப் போடப்படுகிறது என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் இதன் காரணமாக அவர் சாப்பிடாமல் வெறும் ஜூஸ் மட்டும் குடித்து பட்டினியுடன் இந்த திரைப்படத்தில் தனது உடலை வருத்திக்கொண்டு நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் வாயை அசைத்தாலே இந்த மேக்கப் முற்றிலுமாக கலைந்து விடும் என்ற காரணத்தினால் கஷ்டப்பட்டு கமலஹாசன் இப்படி ஒரு செயலை செய்து வருகிறார்.

மேலும் இப்படிப்பட்ட செயலை நடிகர் கமல் செய்யும் பொழுது அவற்றை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார் ஆனால் இந்தியன் திரைப்படத்தை விட இந்தியன் 2 திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் மேலும் இந்த திரைப்படம் பற்றிய ஒன் லைன் ஸ்டோரி ஒன்றையும் கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் இந்த திரைப்படம் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த காலகட்டத்தில் சில காட்சிகளை காண்பிக்கபட்டு 90 ஆம் காலத்துடன் கதை நகரும் ஆனால் இந்தியன் திரைப்படத்தில் காட்டாத இந்தியன் 2 திரைப்படத்தில்  இந்தியன் தாத்தாவின் அப்பாவையும் காட்டும் வகையில் இந்த திரைப்படத்தின் கதை நகரும் மேலும் இந்த திரைப்படத்தில் தந்தை மகனுக்குமான சண்டைகள் கூட இருக்கும் என நமது எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.