Why Kamal Raghuvaran parallel : தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் ரகுவரன். எத்தனையோ நடிகர்கள் ஹீரோவாக நடித்து தான் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் ஆனால் வில்லனாக நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரகுவரன் மட்டுமே.
ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு தன்னை அந்த கதாபாத்திரத்திற்கு தயார்படுத்திக் கொள்வார் இந்த நிலையில் ஒரு இயக்குனர் ரகுவரன் இடம் கதையை சொல்லிவிட்டார். படப்பிடிப்பிற்கு அனைவரும் தயாராக இருக்கிறார்கள் ஆனால் கேரவனிலிருந்து ரகுவரன் மட்டும் வரவில்லை உடனே கேரவனுக்கு சென்று இயக்குனர் பார்க்கிறார் ஆனால் ரகுவரன் இடம் சொன்ன கதாபாத்திரம் எப்படி கால் வைக்க வேண்டும் எப்படி கையை அசைக்க வேண்டும் என்று உட்கார்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருப்பாராம்.
ரகுவரன் தன்னுடைய சிந்தனை எல்லாமே அந்த கதாபாத்திரத்தில் மட்டுமே இருக்கும் இந்த நிலையில் ரகுவரனின் மனைவி ரோகினி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் அப்பொழுது அவர் கூறியதாவது துள்ளித் திரிந்த காலம் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது அதில் ரகுவரனுக்கு ஒரு கதாபாத்திரம் வெயில் சுட்டெரிக்கும் சென்னையில் ஸ்வெட்டர் போட்டு கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
எத்தனையோ திரைப்படங்கள் இருந்தாலும் ரகுவரனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுவது அஞ்சலி அவரின் வாழ்க்கையில் மிகவும் திறுப்பு முறையாக மாறிய திரைப்படம் பல இயக்குனர்கள் ரகுவரனை வைத்து தான் கதையை உருவாக்குகிறார்கள் அதேபோல் கமல் இதுவரை இரு நடிகர்களுடன் இணைந்து நடித்ததே கிடையாதாம் 1 ரகுவரன் மற்றொன்று கார்த்தி கார்த்தி உடன் நடிக்க இன்னும் கூட வாய்ப்பு இருக்கிறது ஆனால் ரகுவரன் அவர்களுடன் நடிக்க வாய்ப்பே கிடையாது.
குருதி புனல் திரைப்படத்தில் நாசர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது ரகுவரன் தான் ஆனால் கடைசியில் ரகுவரனையும் மாற்றினார்கள் அதற்கு காரணம் என்ன என்று விசாரித்ததில் யார் நடிப்பில் அசுரன் என மிகப் பெரிய யுத்தம் போனதாகவும் அதனால்தான் கடைசியில் ரகுவரன் மாற்றப்பட்டதாகவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.