தமிழ் சினிமா உலகில் பிரமாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் ஷங்கர் இவரது படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டாக இருந்தாலும் அதை விட வசூலில் நான்கைந்து மடங்கு அள்ளுவதால் இவரை ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் செல்லமாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் என அழைப்பது வழக்கம்.
இதுவரை ரஜினி, கமல், அர்ஜுன், விஜய், விக்ரம் போன்ற டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கிய வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக ரஜினி, விஜயை வைத்து அதிக படங்களை இயக்கியுள்ளார். கதைகளுக்கு ஏற்றவாறு திறமையான நடிகர்களை வைத்து படங்களை எடுப்பது வழக்கம்.
அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் 1999 ஆம் ஆண்டு அர்ஜுனை வைத்து முதல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த படம் அப்பொழுது வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது. ஆனால் உண்மையில் சொல்லவேண்டுமென்றால் இந்த திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனது.
என்னவோ கமல் தான் ஆனால் அந்த படத்தின் கதை எல்லாம் கேட்டுவிட்டு நன்றாக தான் இருக்கிறது ஆனால் சில மாற்றங்களை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என கமல் கூறியுள்ளார். சிறு சிறு மாற்றங்கள் படத்தின் பாதிப்பை பெரிதாகும் என்ற காரணத்தினால் ஷங்கரும் யோசித்துக் கொண்டிருந்தாராம் ஒரு கட்டத்தில் இதை உணர்ந்து கொண்ட கமல் உடனடியாக படத்தில் சில மாற்றங்களை செய்து வேறு ஒரு நடிகரை நடிக்க வையுங்கள் என சொல்லிவிட்டு அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார்.
ஏன் இவ்வாறு அவர் விலகி அதற்கான காரணமும் அப்பொழுது சொல்லியுள்ளார் ஏனென்றால் சில மாற்றங்கள் நான் செய்யச் சொல்வதும் நீங்கள் மாற்றம் செய்தாலும் அது நமக்கு இடையே சில கருத்து வேறுபாடுகளை உண்டாக்கி விடும் எனவே படத்தில் சில மாற்றங்களை செய்து நீங்கள் வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றி காண்பது சிறப்பு என கூறிய பதில் அளித்து விட்டு அதிலிருந்து வெளி வந்துள்ளார்கள். இப்பொழுது சங்கரும், கமலும் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.