உலகநாயகன் கமலஹாசன் தற்போது நடிப்பது மற்றும் படங்களை தயாரிப்பது என இரண்டிலும் முழுவீச்சாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் முதன் முறையாக கைகோர்த்து விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப்படம் பான் இந்திய அளவில் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் படத்தில் ஆக்சன் சீன்களுக்கு பஞ்சமில்லாமல் படம் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தில் டாப் நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் நரேன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து உள்ளனர்.
மேலும் பல இளம் நடிகர் நடிகைகளும் நடித்துள்ள விக்ரம் படத்தை அதிக பொருட்செலவில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து படத்திற்கான புரமோஷனுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் இருவருமே பேட்டி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் படத்தின் புரமோஷனுக்காக கமல் மலேசியா சென்றுள்ளார் அங்கு விக்ரம் படத்தின் அடுத்தடுத்த காட்சிகளில் தளபதி விஜய் நடிப்பாரா என்ற கேள்வி எழுப்பினர் அதற்கு கமலஹாசன் விக்ரம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் சூர்யா நடிக்க உள்ளார் எனினும் விஜயின் கால்ஷீட் கிடைத்தால் விஜயுடன் ஒரு படம் தயாரிக்கலாம் என கமலஹாசன் கூறியுள்ளார்.
விஜய் தற்போது அவரது 66வது திரைப்படத்தில் இயக்குனர் வம்சி உடன் இணைந்து நடித்து வருகிறார் இந்த படத்தைத் தொடர்ந்து 67வது படத்தையும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிக்க கமிட் ஆகி உள்ளதால் இதை இரண்டு படங்களுக்கு பிறகு வேண்டுமானால் கமலுடன் இணைய வாய்ப்பு இருப்பது போல் தெரிய வருகிறது.