கமல் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித்தா.? தல ரசிகர்கள் கிரியேட் செய்த போஸ்டர் இதோ.!

ajith
ajith

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வசூல் மன்னனாகவும் வலம் வருகிறார், இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, மேலும் தன்னுடைய வாழ்க்கையிலும் எந்த ஒரு குறை கூற முடியாத அளவிற்கு வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.

அதேபோல் அஜித் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்கள் ரசிகர்கள், அதனை வெளிப்படுத்தும் போது சில சர்ச்சைகள் வரத்தான் செய்கிறது, இந்த நிலையில் அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஆனால் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டே போகிறது. மேலும் கொரோன  ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும் என திட்டவட்டமாக அஜித் கூறிவிட்டார்.

இந்தநிலையில் கமலஹாசன் தயாரிப்பில் உருவான திரைப்படம் விருமாண்டி இந்த திரைப்படம் ஜாதி கலந்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற வெற்றி பெற்றது, அப்படியிருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து  அஜித்குமார் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு போஸ்டரை கிறியேட் செய்து ரசிகர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

தற்பொழுது இந்த போஸ்டர் இணையதளத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்து திரைப்படத்திற்காக கதை கேட்க ஆரம்பித்துவிட்டார் அஜித்குமார், அந்த திரைப்படம் விருமாண்டி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் செதுக்கிய புகைப்படம் இதோ.

ajith-kumar-tamil360newz583x1024
ajith-kumar-tamil360newz583x1024