நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கம் மட்டும் தலை காட்டாமல் அரசியல், வியாபாரம், போன்றவற்றில் தலை காட்டி ஓடினார் இருப்பினும் சினிமா அவரை விடாமல் ஒரு பக்கம் துரத்திக் கொண்டுதான் இருந்தது. அப்படி லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் கதையை சூப்பராக கமலிடம் சொல்லி உள்ளார்.
கமலுக்கு அந்த கதை ரொம்ப பிடித்து போகவே துணிந்து அந்த படத்தில் நடித்தார் மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் விக்ரம் படத்தை தயாரித்தார். படம் ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், காயத்ரி, ஏஜென்ட் டினா மற்றும் பல பிரபலங்கள்..
இந்த படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தனர். படம் வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஆரம்பத்திலேயே வசூல் வேட்டை நடத்தியது. அது படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக நின்றது. விக்ரம் திரைப்படம் தமிழ் நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.’
இதை உணர்ந்த கமலஹாசன் இயக்குனர், உதவி இயக்குனர், சூர்யா போன்றவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து அசத்தினார். மேலும் படத்தின் வெற்றி விழாவின் பொழுது 40 வகையான உணவுகளை போட்டு பட குழுவுக்கு செம்ம விருந்து வைத்தார் கமல். இதுவரை விக்ரம் படம் வெளியாகி சுமார் 9 வாரங்கள் ஆகிறது இதுவரை மட்டுமே சுமார் 432 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மட்டுமே சுமார் 182 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கமலின் விக்ரம் திரைப்படம் OTT தளத்திலும் வெளியாகி நல்லா வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் படக்குழுவும் சரி, படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கமலஹாசனும் செம சந்தோஷத்தில் இருக்கிறார்.