உலகநாயகன் கமலஹாசன் மிரட்டி உள்ள திரைப்படம் தான் விக்ரம் படம். நேற்று கோலாகலமாக திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது இந்த படம் முழுக்க முழுக்க போதைபொருள் சம்பந்தப்பட்ட ஒரு படமாக எடுக்கப்பட்டு உள்ளது அதை எப்படி கமல் தடுத்து நிறுத்துகிறார்.
எதிரிகளை எப்படி கொள்கிறார் என்பதே படத்தின் கதை. படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல் வந்துள்ளதால் தற்போது கொண்டாடி வருகின்றனர் விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் என பலரும் இந்த படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து உள்ளனர்.
இதனால் கமல் ரசிகர்களையும் தாண்டி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இந்த திரைப்படம் ரொம்ப பிடித்து போய் இருப்பதால் விக்ரம் படத்தை போட்டிபோட்டுக்கொண்டு படத்தை பார்த்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவலும் கிடைத்துள்ளது.
உலக அளவில் சுமார் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் மட்டும் விக்ரம் திரைப்படம் 5 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவலும் கிடைத்துள்ளது.
அதன்படி பார்வையில் கமலின் விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் இருபத்தி 23.27 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் உலா வருகின்றன. விக்ரம் திரைப்படம் வருகின்ற நாட்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலில் ஒரு புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது. கமலின் சினிமா கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக அமையும் எனவும் கூறப்படுகிறது.