நீயா.? நானா.? வா களத்துல மோதிப் பார்க்கலாம்.. 22 முறை போட்டி போட்ட கமல் – விஜயகாந்த்.! அதிக ஹிட் யார் தெரியுமா.?

Vijayakanth
Vijayakanth

திரையுலகில் இருக்கும் டாப் நடிகர்கள் விசேஷ நாட்களில் நேருக்கு நேராக மோதிக் கொள்வதை ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றனர். அது பல ஆண்டுகளாக நடித்து கொண்டு இருக்கிறது. எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், ரஜினி – விஜயகாந்த், விஜயகாந்த் – கமல் என டாப் ஹீரோக்கள் மோதிக்கொள்வது வழக்கம்.

இதில் யார் கை ஓங்கியது என்பதை ரசிகர்களும் தெரிந்து கொள்கின்றனர் அப்படி 80, 90 கால கட்டங்களில் விஜயகாந்த் – கமல் மோதி கொண்டு உள்ளனர்.  இருவரும் 22 தடவை மோதி உள்ளனர் அதில் யார் கை ஓங்கி உள்ளது என்பது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

1981 ஆம் ஆண்டு விஜயகாந்தின் சிவப்பு மல்லி – கமலின் சங்கர் லால் படம் நேருக்கு நேர் மோதியது இதில் கமலின் படம் அதிக வசூலை அள்ளியது.  1982 ஆம் ஆண்டு விஜகாந்தின் பார்வையின் மறுபக்கம் – கமலின் மூன்றாம் பிறை ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோதின இதில் மூன்றாம் பிறை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது.

1984 ஆம் ஆண்டு கமலின் எனக்குள் ஒருவன் திரைப்படம் விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படத்துடன் நேருக்கு நேர் மோதியது இதில் அதிக வசூலை அள்ளி வைதேகி காத்திருந்தால் வெற்றி பெற்றது.  1984 ஆம் ஆண்டு ஜப்பானில் கல்யாணராமன் படத்துடன் விஜயகாந்தின் ஏமாறாதே ஏமாற்றாதே என்ற படம் பெரிய வெற்றியை பெற்றது.

1985 ஆம் ஆண்டு  கமல் நடிப்பில் ஒரு கைதியின் டைரி  படத்துடன் விஜயகாந்தின் அலை ஓசை மோதி தோல்வி அடைந்தது.  1985 கமலின் காக்கி சட்டை விஜயகாந்தின் ராம் ஸ்ரீராம் படம் ஓதியது இதில் விஜயகாந்த் படம் தோல்வியடைந்தது. 1986 ஆம் ஆண்டு புன்னகை மன்னன் படத்துடன் விஜயகாந்தின் தர்ம தேவதை மற்றும் தழுவாத கைகள் படங்கள் மோதியது ஆனால் இரண்டுமே சுமாராக ஓடியது.

1987 ஆம் ஆண்டு காதல் பரிசு படத்துடன் விஜயகாந்தின் சிறைப்பறவை படம் வெளிவந்து பெரிய வெற்றியை பெற்றது இப்படி அடுத்தடுத்த ஆண்டில் விஜயகாந்த் – கமல் படங்கள் மோதின. மொத்தம் 22 தடவை மோதியுள்ளனர் இதில் விஜயகாந்த் படங்கள் 7  முறையும், கமலின் படங்கள் 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 6 முறை இரண்டு படங்களுமே சுமாராக ஓடி வெற்றி பெற்றது.