இன்று மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக விளங்குபவர் கேப்டன் விஜயகாந்த் இவர் சினிமாவின் மீது உள்ள காதலால் சென்னைக்கு வந்தார். எந்த ஒரு பின்புலமும் இல்லாததால் பட வாய்ப்பு தேடி அங்கும் இங்கும் அலைந்தார் முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்
கிராமத்து கதைகளில் நடித்து வெற்றிகளை அள்ளியதோடு மட்டுமல்லாமல் தனக்கென ரசிகர்களை உருவாக்கினார் ஒரு கட்டத்தில் ஆக்சன் கதைகளிலும் நடிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு ரஜினி கமலுக்கு நிகராக விஜயகாந்த் பேசப்பட்டார் இப்படிப்பட்ட விஜயகாந்த்தை வைத்து அதிகம் படம் எடுத்தது..
கேப்டன் விஜயகாந்த் இப்படிப்பட்டவரா.? நமக்கு தெரியாத விஷயங்கள்
எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ராம நாராயணன் ஆகியவர்கள் தான். விஜயகாந்த் வளர்ந்து வரும் காலத்தில் ரஜினி அவருடன் சேர்ந்து நடிக்க மறுத்தார். அப்படிப்பட்ட ரஜினிக்கு நிகராக விஜயகாந்தின் படங்கள் ஹிட் அடித்தது. அப்படி ஒரு தரமான சம்பவத்தை தான் 2001ஆம் ஆண்டு விஜயகாந்த் செய்து காட்டினார்.
2001 ஆம் வருடம் தீபாவளியை முன்னிட்டு விஜய் நடித்த ஷாஜகான், கமலஹாசன் நடித்த ஆளவந்தான், பிரபுதேவா நடித்த மனதை திருடிவிட்டாய், சூர்யா நடித்த நந்தா போன்ற படங்களுடன் விஜயகாந்தின் தவசி படமும் ஒரே நாளில் வெளியாகியது. இதில் கமலின் ஆளவந்தான் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது..
நாலா பக்கமும் கொட்டும் பணம்.. கேப்டன் விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
மேலும் சேது படத்தை இயக்கிய பிறகு பாலா நந்தா படத்தை எடுத்ததால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் வசூல் என்று பார்க்கையில் விஜயகாந்தின் தவசி படம் தான் அதிக வசூலை அள்ளியோடு மட்டுமல்லாமல் அதிக நாட்கள் ஓடியது. 2001 ஆம் ஆண்டு தீபாவளி விஜயகாந்த் தீபாவளியாக அமைந்தது.