கௌதமி மகளுடன் இணைந்து கமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் – கூட யார் இருக்காங்க பாருங்கள்.!

gowthami

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் பல்வேறு விதமான கெட்டப்புகளை போட்டு நடித்து வெற்றி மேல் வெற்றியை கண்டுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்தது தான் ஏன் அண்மையில் கூட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

வசூல் ரீதியாக சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது விக்ரம் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் சபாஷ் நாயுடு, தேவர்மகன் 2, இந்தியன் 2 போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இப்படி வெற்றி மேல் வெற்றியை ருசித்தாலும், நிஜ வாழ்கையில் சற்று பிளேபாயாக இருந்துள்ளார் கமல்.

1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன்பின் அவரை விவாகரத்து செய்தார் பின் 1988 ஆம் ஆண்டு சரிகா தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் 2004 ஆம் ஆண்டு அவர் விவாகரத்து செய்து விட்டார். இரு மனைவிகளையும் விவாகரத்து செய்த பிறகு உலகநாயகன் கமலஹாசன் நடிகை கௌதமியை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் சில காலங்கள் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கௌதமி 1999 ஆம் ஆண்டு முதல் கணவர் சந்தி பாடியா என்பவரை விவாகரத்து செய்தார் இவர்கள் இருவருக்கும் சுபலட்சுமி பாட்டியா என்ற ஒரு மகள் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் கமலஹாசன் கௌதமி அவரது மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கௌதமி போலவே அழகாக இருக்கிறார் நிச்சயம் இவருக்கு ஹீரோயின்னாக வரும் தகுதி அனைத்தும் இருப்பதாக கூறி கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

gowthami
gowthami
gowthami