10 நிமிட காட்சிக்காக கமல் எடுத்த புதிய முயற்சி – தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பண்ணல ..! மிரட்டல உருவாகும் இந்தியன் 2..

indian
indian

உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்போ நடித்துவரும் திரைப்படம் இந்தியன் 2 இந்த படத்தின் ஷூட்டிங் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருந்தாலும் பிரச்சினை மேல் பிரச்சினை வந்ததால் பாதியிலேயே கைவிடப்பட்டது இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் விடாமல் இந்த படத்தை எடுத்து விட வேண்டும் என பல்வேறு  போராட்டம், பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக தீர்வு கண்டது.

தற்போது இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியன் 2 படத்தின் படபிடிப்பு 60% ஏற்கனவே முடிக்கப்பட்ட நிலையில் மீதி 40% தான் இப்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை ஒரு பக்கம் எடுத்து வந்தாலும் மறுபக்கம் இவர் தெலுங்கில் நடிகர் ராம் சரணை வைத்து  RC 15 என்னும் படத்தையும் உருவாக்கி வருகிறார்.

இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் எடுக்க முடியாது என்பதால்.. இயக்குனர் ஷங்கர் ஒரு ஐடியா பண்ணி உள்ளார் அதாவது இந்தியன் 2 படத்தில் இயக்க தனக்கு உதவி இயக்குனராக மூன்று இயக்குனர்களை அவர் வைத்துள்ளார். அந்த மூன்று இயக்குனர்கள் வேறு யாரும் அல்ல வசந்த பாலன், அறிவழகன், சிம்பு தேவன் தான்.

மூன்று இயக்குனர்களுக்கும் ஷங்கர் யார் யார் எந்தெந்த காட்சியை எடுக்க வேண்டுமென ஒரு லிஸ்ட் கொடுத்து விட்டாராம்.  அதாவது கமல் காட்சியை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன் மீதி காட்சியை நீங்கள் எடுங்கள் என கூறிவிட்டு தற்பொழுது அவர் RC 15 படத்தை எடுக்க போய்விட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவ்வபொழுது  இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொள்வார் என பேசப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 படத்தில் கமல் தற்பொழுது கலந்து கொண்டுள்ளார் இந்த படத்தின் ஒரு காட்சி அனைவரையும் மெய் சிலருக்கு வைத்து விட்டாராம் அதாவது காlமல் 10 நிமிட காட்சியில் 14  மொழிகளை பேசி உள்ளாராம். கமலின் நடிப்பு மற்றும் பேச்சுத் திறமையை பார்த்து ஒரு நிமிடம் அப்படியே படக்குழு ஆச்சரியப்பட்டு  போய் நின்று விட்டதாம்.