கமலஹாசன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்த மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கமலஹாசனின் டைம் டிராவல் பற்றிய கதை ஒன்றை தன்னிடம் சொன்னதாகவும் பதிவு செய்துள்ளார்.
மேலும் கமலஹாசனின் அடுத்த படத்தை அந்த இயக்குனர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்தது. திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இவ்வாறு விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் கமலை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.அதோடு மட்டுமல்லாமல் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் விருந்து வைப்பது மற்றும் படக்குழுவினர்கள் பலருக்கும் பரிசு அளித்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் டைம் டிராவல் படமான இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ரவிகுமார் கூறியதாவது: நான் வியந்து பார்த்த ஆளுமை அவருடையது எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்.
அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்தும், டைம் டிராவல் பற்றிய ஒரு ஸ்பானிஸ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்து கொண்டதும் இன்னும் வியப்பு குறையாத நிமிடங்கள். வாழ்வின் பரவசம் என்று பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக கமல்ஹாசனின் அடுத்த திரைப்படமான டைம் டிராவல் திரைப்படத்தினை ரவிக்குமார் இயக்குவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளது.