திரை உலகில் ஹிட் படங்களை கொடுத்து தன்னை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி கொண்ட பிறகு நடிகர் சம்பளத்தை உயர்த்திக் கொண்டு அடிப்பது வழக்கம் அதிலும் நல்ல காசு பார்த்து விட்டால் தொடர் படங்களை நடித்து தனது மார்க்கெட்டை அடுத்த லெவலுக்கு நகர்த்தி செல்வார்கள்.
ஆனால் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் மட்டும் இதில் இருந்து மாறுபட்டவர். ஒரு கட்டத்தில் சினிமாவையும் தாண்டி அரசியல் களம் புகுந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு பகுதியில் களம் கண்டார்.
இவர்கள் கண்டிப்பாக ஜெயிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஆனால் அவர் தோற்றாலும் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதால் அவர் அடுத்து வருகின்ற எம்பி எலெக்சன்னில் அவர் நிச்சயம் ஓர் இடத்தைத் தக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படி இருந்தாலும் இவர் தேர்தலுக்காக 100 கோடிக்கு மேல் செலவு செய்து உள்ளார்.
அதை மீட்டெடுக்க தற்பொழுது நடிகர் கமல் தமிழ் சினிமாவில் மீண்டும் களம் இறங்கி ஹிட் படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது ஏற்கனவே அரசியலுக்கு முன்பு இவர் லோகேஷ் கனகராஜ் உடன் கதை கேட்டு “விக்ரம்” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதை தொடர்ந்து இந்த வருடத்தில் அடுத்தடுத்து தொடர் நான்கு படங்களில் நடிக்க உள்ளார். தேர்தல் களத்தில் விட்ட பணத்தை இதில் எடுக்க பார்க்கிறார் கமல்.
தற்பொழுது நல்ல மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருப்பதால் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இப்படி ஒரு நடிகரை வைத்து படம் எடுத்தால் அவர்களும் லாபம் பார்த்து விடலாம் என நம்பி கமலை அடுத்தடுத்த படங்களில் கமிட் செய்ய ரெடியாக இருக்கின்றனர்.
அந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கமலுடன் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளன. ஆனால் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை.