நடிகர் கமலஹாசன் அவர்கள் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அவருடைய ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனமும் மிகவும் பிரமாண்டமாக விளம்பரம் ஆகிவிட்டது அந்த வகையில் தொடர்ந்து இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படங்கள் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்.
அது மட்டும் இல்லாமல் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக நடிகர் உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார் ஆனால் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் திரைப்படமே தன்னுடைய கடைசி திரைப்படம் என்று கூறியிருந்தார்.
இதற்கு முக்கிய காரணம் அவருக்கு விரைவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது தெரிந்ததன் மூலம் தான் இப்படி கணித்துள்ளார் என்று பலரும் கூறி வருகிறார்கள் அதேபோல இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கும் நிலையில் அவற்றை தட்டிக் கழிக்கவும் யாருக்கும் மனது வராது. மேலும் உதயநிதி ரெட் ஜெயின் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு விழாவில் கமல் கலந்து கொண்ட பொழுது உதயநிதி என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு திரைப்படம் நடிப்பார் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
மேலும் உதயநிதியுடன் இந்த நட்பு கமலின் அரசியல் வியூகம் என சிலர் பேசி வந்த நிலையில் கமலஹாசன் ஒரு இரண்டு சீட்டு எப்படியாவது இவர்களிடம் இருந்து பெற்றுவிடலாம் என்ற காரணத்திற்காக தான் கமல் இப்படி செய்கிறார் என்று கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
அதேபோல கமலின் திரைப்படத்திலிருந்து விலகுவதாக பத்திரிகையாளரிடம் அவர் கூறியிருந்த நிலையில் கமலஹாசனும் இதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பால் கோபமான நடிகர் கமல் 24ஆம் தேதி ராகுல் காந்தி அவர்களின் பாரத் சோடா யாத்திரையில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார் மேலும் இதில் அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்ள இருப்பதாக தெரியவந்துள்ளது.