தமிழ் சினிமா உலகில் அதிக ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து பிரபலமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பொழுது கூட வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.
எப்படி இருந்தாலும் 90 கால கட்டத்தில் இவர் நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஒரு வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. அந்தவகையில் 1991 -ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் தளபதி. இந்தப் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மலையாள நடிகர் மம்முட்டி அரவிந்த்சாமி என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே..
இந்தப் படத்தில் நடித்து அசத்தி இருந்தது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருப்பதால் அப்போது பட்டையை கிளப்பியது. படத்தை மிக நேர்த்தியாக மணிரத்னம் இயக்கியுள்ளார் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா சிறப்பாக இசையமைத்திருந்தார் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் ஃபேவரட் பாடல்களாக இருந்து வந்துள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கமலும் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான் அப்படி இந்த படத்தின் தலைப்பை முதலில் ரஜினி கமலிடம் கூறியுள்ளாராம் ஆனால் கமலுக்கு தளபதி என்ற பெயருக்கு பதிலாக கணபதி என விழுந்துவிட்டது. ரஜினி படத்தின் பெயர் எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார் கமல் ஐயோ வேண்டாம் ரஜினி என கூறி உள்ளார்.
பெயர் நன்றாக இல்லையா எனக் கேட்க.. தலைப்பு நன்றாக இல்லை என கமல் கூறிவிட்டார் இதனால் ரஜினி ஆச்சரியப்பட்டு தலைப்பு சரி இல்லையா என கேட்டுள்ளார். கமல் ஆமாம் இது என்ன தலைப்பு விநாயகர் சதுர்த்திக்கு ஏதோ பூஜை போட்ட மாதிரி இருக்கு என கூறி உள்ளார்.
படத்தின் தலைப்பு செம சூப்பராக இருக்க வேண்டாமா கணபதி என பெயர் வைத்து உள்ளீர்கள் என கமல் கூறியுள்ளார். உடனே நம்ம சூப்பர் ஸ்டார் படத்தின் தலைப்பு கணபதி இல்லை தளபதி என சொன்ன பிறகு அப்படியா சூப்பராக இருக்கிறது என தலையை ஆட்டினாராம்.