kamal speech angry with producer: தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் சமீபத்தில் நடித்து கொண்டிருந்த இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் தள்ளிவைத்துவிட்டு தற்போது தன்னுடைய மெகா ஹிட் திரைப்படமான பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளாராம்.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரீமேக் உரிமையை பிரபல நடிகை ஸ்ரீபிரியா அவர்கள் வாங்கி உள்ளதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பாபநாசம் திரைப்படம் ஆனது திருஷ்யம் 2 திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் அவர்கள் தான் இயக்கி உள்ளார் ஆனால் தற்போது உலக நாயகன் கமலஹாசனுக்கு ஜீத்து ஜோசப்பும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் இருந்ததன் காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு என்ன ஆகும் என யோசித்து நிலையில் இருவரும் சேர்ந்து விட்டார்கள்.
இந்நிலையில் பாபநாசம் இரண்டாம் பாகத்தில் நான் எந்த ஒரு விஷயத்திலும் தலையிட மாட்டேன் எனவும் கூறிவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ஒரே மாதத்தில் முடித்து வெளியிட வேண்டும் என கூறியதற்கு இயக்குனரும் பச்சை கொடி காட்டி விட்டாராம்.
இதனால் தற்போது லைக்கா நிறுவனமானது கடும் கோபத்தில் இருக்கிறதாம். ஏனெனில் ஒரு பக்கம் சங்கரும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்க முன்வரவில்லை அதுமட்டுமில்லாமல் கமலும் அதற்கு ஒத்துழைக்கும் படி கிடையாது.
இந்நிலையில் நடிகர் கமல் இந்த இந்தியன் 2 பிரச்சனை எல்லாம் விடுங்க அத நான் பாத்துக்குறேன் என வாக்குக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது இது ஒரு பக்கம் இருக்க தற்போது திரிஷ்யம் 3 திரைப் படத்தின் படப்பிடிப்புக்கான வேலையானது மிக விறுவிறுப்பாக நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.