கமல் சார் நடித்ததிலேயே எனக்கு ரொம்ப பிடித்த படம்.. அதுக்கே தேசிய விருது கொடுப்பேன் – தனுஷ் கலக்கலான பேச்சு

kamal
kamal

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் நடிப்பு திறமையை மாற்றி நடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறார்.

மேலும் தனது படத்தில் பல போட்டு பல பரிமாணங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “விக்ரம்” திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

திரையுலகில் நடிப்பதை மட்டும் ஒரு கொள்கையாக வைத்துக் கொள்ளாமல் அதையும் தாண்டி இயக்கம், திரைக்கதை, நடனம், தயாரிப்பாளர் என அனைத்திலும் கை தேர்ந்தவராக ஜொலிகிறார் கமல்.. இவருடைய ஒரு சில படங்களை பார்த்து மாற்ற டாப் நடிகர்களே கமல் இதில் எப்படி நடித்துள்ளார், இந்த படத்தை எப்படி எடுத்து இருக்கிறார்.

இது எப்படி சாத்தியம் என தினமும் புலம்பி கொண்டவர்கள் ஏராளம் அப்படித்தான் நடிகர் தனுஷை ஆச்சரியப்படுத்திய கமல் திரைப்படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.. தெனாலி படத்திற்காக நான் அவருக்கு தனி தேசிய விருதை கொடுப்பேன் எனக் கூறினார் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல் சார் எப்படி பண்ணினாருனே யோசிக்க முடியல..

அவரோட குணா, தெனாலி படத்தை எல்லாம் நான் நடிக்க தகுதியே கிடையாது தெனாலி காமெடி படம் தான் ஆனா அந்த படத்துல நடிக்கிறது ரொம்ப கஷ்டமா அதுக்காக நான் கமல் சாருக்கு தேசிய விருது தருவேன் என வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது