விருமாண்டி படத்தில் தன்னுடன் நடித்த “காளையை” வெளிஉலகத்திற்கு காட்டிய கமல்.! மேடையில் கமலுடன் செம்ம கெத்தாக நிற்கும் மாடு.

virumandi

நடிகர் கமல் பல்வேறு விதமான கதை மற்றும் பல ரோல்களில் வித்தியாசமான கெட்டப்புகளை  போட்டு நடித்து வெற்றி கண்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் சமீப காலமாக சினிமாவில் நடிக்காவிட்டாலும் அவருடைய நடிப்பு மற்றும் திறமை எப்பொழுதும் சினிமாவில் பேசிக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் இன்றும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.இப்படி இருக்க அரசியல் பிரவேசத்தில் பயணித்த கமல் மீண்டும் சினிமா பக்கம் தொடர்ந்து நடிக்க உள்ளார்.

அந்த வகையில் லோகேஷ் கனகரஜுடன் உடன் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை மிகப்பெரிய ஹிட் கொடுக்க அதிக ஆர்வம் காட்டுகிறார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி படம் உலக நாயகன் கமலுக்கு அதிரி புதிரி யான ஹிட் கொடுத்தது மேலும் அவரது கேரியரில் முக்கியமான படமாக இந்த படம் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இவர் எப்படி பிரபலமடைந்த அதுபோல இந்த படத்தில் அவருடன் நடித்த ராஜா என்ற காளையும் வேற லெவல் பிரபலமடைந்தது. மேலும் இந்த படத்தில் அவருடன் நடித்த காளையை கமல் அறிமுகப்படுத்தி வைத்த போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

virumandi
virumandi