நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் உலகநாயகன் கமலஹாசன் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் அவரை விடாமல் மடக்கி இயக்குனர்கள் கதை சொல்லி வந்தனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை கமலுக்கு ரொம்ப பிடித்துப் போகவே அந்தப் படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார்.
படம் ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி வெளியாகியது கமல் எதிர்பார்த்தது போலவே படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடியது அதன் காரணமாக விக்ரம் திரைப்படம் தற்போது வரை மட்டுமே சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசன் அடுத்ததாக தேவர் மகன் 2, இந்தியன் 2 போன்ற படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார். முதலாவதாக உலகநாயகன் கமலஹாசன் கிடப்பில் கிடக்கும் இந்தியன் 2 முடிக்கவே அதிகம் முனைப்பு காட்டுவார் என தெரிய வருகிறது.
மேலும் தனது அடுத்தடுத்த படத்திற்காக புதிய முடிவுகளையும் கமல் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது தற்போது சினிமாவில் ஒரு அனுபவ சாலியாக இருக்கும் கமல் இனி தனது வயதுக்கு ஏற்றார் போல ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார் எனவும்..
மேலும் இனி முத்த காட்சிகள் மற்றும் நடிகைகளுடன் ரொம்ப நெருக்கமான காட்சிகளை தவிர்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது இனி கமல் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்கள் கொண்டாடும் படி இருக்கும் எனவும் தெரிய வருகிறது. இதனால் கமல் ரசிகர்கள் தற்போது செம சந்தோஷத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.