இந்தியன் 2 திரைப்படத்தைப் பற்றி ரசிகர்களுக்கு வேற லெவல் அப்டேட்டை பகிர்ந்த கமல்.

kamal

நடிகர் கமலின் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்ப்பது இந்தியன் 2 திரைப்படத்தை தான் கடந்த 1996 ஆம் ஆண்டு கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக உருவாகி மிகப்பெரிய அளவில் சாதனை படைத்த திரைப்படம் தான் இந்தியன் இந்த திரைப்படம் வெளியானபோது கமல் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஷங்கர் அவர்கள் விருவிருப்பாக எடுத்து வந்தார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் ஆனால் எதிர்பாராதவிதமாக இதில் ஒரு சிலருக்கு உயிர்பலி ஏற்பட்டதால் இரண்டாம் பாகம் அப்படியே நின்றுவிட்டது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கரும் இந்த திரைப்படத்தை இயக்காமல் மற்ற நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி வந்தார் இதனால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு எந்த படத்தையும் ஷங்கர் இயக்க கூடது என தடைவிதிக்க கோரி ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் மேல் முறையீடு செய்திருந்தது.

இதனைத்யடுத்து இந்த விவகாரம் பற்றி எந்த தகவலையும் ரசிகர்களுக்கு பகிராமல் இருந்த கமல்ஹாசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்தியன்2 படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் மீது இருக்கும் பிரச்சனைகள் முடிந்தவுடன் கூடிய சீக்கிரம் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

kamal
kamal

கமல் மேலும் இந்த தகவலை ரசிகர்கள் பலரும் தற்போது ஒரே உற்சாகமாக இருக்கிறார்கள்.கமலும் ஒரு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார் அவ்வாறு பார்த்தால் இவர் நடித்துவரும் திரைப்படங்களையும் கமல் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.