Marudhanayagam Movie: உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் மருதநாயகம் படம் குறித்து பேட்டி அளித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசன் தொடர்ந்து படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பது, இயக்குவது என பலவற்றிலும் பிஸியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அப்படி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமலஹாசன் நடிப்பில் மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்ட படம்தான் மருதநாயகம். இவருடைய கனவு திட்டமாக 1997ஆம் ஆண்டு மருதநாயகம் படம் தொடங்கப்பட்ட நிலையில் நிதி நெருக்கடி காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 18ம் நூற்றாண்டின் போர் வீரன் முகமது யூசுப் காணின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மருதநாயகம் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் 2017ஆம் ஆண்டு சுந்தர் சி-யின் சுங்கமித்ராவுடன் காட்சிப்படுத்தப்பட்ட மருதநாயகத்தின் போஸ்டர் வெளியாக சூப்பர் ஸ்டார் கமலஹாசன் தனது கனவுத் திட்டத்தை புதுப்பித்து உள்ளார் என்ற ஊக்கத்தை தூண்டியது. ஆனால் திடீரென கமலஹாசன் 2020ஆம் ஆண்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் களம் இறங்கியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில் மருதநாயகம் படம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், நான் அந்த காளை மாட்டின் மேல் ஏறி உட்கார்ந்து ஓட்டுவேன் என யாருமே நம்பவே இல்லை. அதில் நிறைய வெளிநாட்டு டெக்னீசியன்கள் வேலை செய்தனர் அவர்களால் எல்லாம் இவர் என்ன சொல்றாரு ஜல்லிக்கட்டு மாடு மேல உட்கார்ந்து ஓட்டுறேன்னு சொல்றாரு ஒரு கோடி ரூபாய் இருந்தால் அதை நாங்க சீஜி பண்ணி கொடுத்து விடுவோம் என கூறினார்கள்.
ஆனால் அப்பொழுது எங்களிடம் ஒரு கோடி ரூபாய் கிடையாது அப்படி பணம் இருந்தால் இன்னும் படத்தை கொஞ்சம் நகர்த்தி இருப்போம். எனவே அதற்காக நானே ஒன்றாவரை மாதம் ட்ரைனிங் எடுத்துக் கொண்டேன். இதனை அடுத்து கழுகு காலில் கொத்தும் காட்சி குறித்து தொகுப்பாளர் கேட்க, அதற்கு கமல் அந்த கழுகை ஆந்திராவில் இருந்து கொண்டு வந்தாங்க தற்போது எல்லாம் அந்த கழுகுகள் இல்லாமல் போய்விட்டது சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பல இனங்களை நான் இழந்து விட்டோம். அந்தக் கழகத்திற்கு நட்சத்திர பாதுகாப்பு மேலும் ட்ரெயினிங் வழங்கப்பட்டது. கரெக்டாக வந்து காலில் கொத்துவதற்காக ஒரு மாதம் ட்ரைனிங் வழங்கப்பட்டது என மருதநாயகம் படத்தின் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.