தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளார்கள். இவர்கள் இருவரும் சமிபத்தில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் நேரலையில் இருவரும் உரையாடினார் அப்பொழுது பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்பொழுது தமிழ் சினிமாவின் நடிப்பு திலகம் சிவாஜி அவர்களை பற்றிய சில அனுபவங்களை விஜய்சேதுபதி கூறுமாறு கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த கமல் அவர்கள் சிவாஜி அவர்கள் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர் எனவும், அவர் இதுவரையிலும் பணத்தை தொட்டுக்கூட பார்த்ததில்லை எனவும் கூறினார். படத்தின் படப்பிடிப்பின்போது படத்திக்காக புது சில்லரை காசுகள் கொட்டப்பட்டு இருந்ததாகவும் அதனை பார்த்த சிவாஜி இதுதான் புது நாணயங்கள் என்று அச்சரியதுடன் கேட்டாராம்.
ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு சில்லரை காசுகளை தெரியவில்லை என பலரும் கிண்டலடித்து அப்போது பேசினார்கள் ஆனால் அதுதான் உண்மை. ஏனென்றால் நான் சிவாஜி அவர்களிடம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறேன் இதுவரை அவர் கையால் வாங்கியது இல்லை இதுவரையிலும் அவர் உண்மையாக பணத்தை பார்த்ததில்லை என கூறினார் கமல் இதனை கேட்டு நடிகர் விஜய் சேதுபதி அதிர்ச்சிக்கு உள்ளானார்.