சாகப் போறியா என எம்.எஸ்.பாஸ்கரை கூப்பிட்டு திட்டிய கமல்.!

kamal
kamal

சினிமாவிற்கு அறிமுகமான காலத்திலிருந்து தற்பொழுது வரையிலும் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்திலேயே சரியான கதாபாத்திரம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததால் தற்பொழுது இவருக்கு வயதாகியும் தொடர்ந்து முக்கிய நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலைகள் நடிகர் கமலஹாசன் மற்றும் காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்களைப் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது எம் எஸ் பாஸ்கர் தொடர்ந்து குணசத்திர நடிகராகவும் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார் மேலும் இவர் பிரபல நடிகை வடிவுக்கரசியுடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் காமெடி நடிகரை தொடர்ந்து டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பணியையும் மேற்கொண்டு உள்ளார்.இப்படி இருக்கையில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் கமலஹாசன் மற்றும் பிரபு இருவரை இவரை பயங்கரமாக திட்டி உள்ளார்கள். இதனை பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் பிரபு தன்னுடன் வயதில் மூத்தவர் என்று கூட பார்க்காமல் எம் எஸ் பாஸ்கரை கூப்பிட்டு திட்டி உள்ளாராம்.

அதாவது  எம் எஸ் பாஸ்கர்  நடித்திருந்த குரு என் நாலு என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்களைப் போல் நடித்திருப்பார்.மேலும் சிவாஜி போல வசனத்தையும் பேசி இருப்பார் இதனை பார்த்த பிரபு கோபமடைந்து அவரை கூப்பிட்டு திட்டி உள்ளார்.சிபாரி சார் உங்களுக்கு மட்டும் அப்பா இல்லை எங்களுக்கும் அப்பாதான் என்று அவரை சமாதானப்படுத்தி உள்ளார்.

மேலும் அதேபோல் கமலஹாசன் எம் எஸ் பாஸ்கர் அவர்களை தன்னுடைய ஆபிஸுக்கு அழைத்து சாகப் போறியா என்று திட்டி உள்ளார் ஏனென்றால் 2000 ஆண்டு தொடக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் பட்டாபியாக நடித்திருந்தார்.இதனால் உடம்பு முழுவதும் தங்க நிற பெயிண்ட் பூசி கொண்டுள்ளார்.

அப்படி நடிப்பது மிகவும் ஆபத்து என்று பாஸ்கரை கூப்பிட்டு திட்டி உள்ளார் கமல். மேலும் பெயிண்ட் உடம்பில் அடிப்பதால் வியர்வை தூரங்கள் அடைப்பு ஏற்பட்டு பிரச்சனை உருவாகி விடும் இதன் காரணமாக அவர் மீது அக்கறை கொண்டு கூப்பிட்டு திட்டியுள்ளார்.