தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் கமலஹாசன் இவரை பலரும் செல்லமாக உலகநாயகன் என அழைப்பது வழக்கம். இவர் திரை உலகில் போடாத கெட்டப்பே கிடையாது நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது அந்த அளவிற்கு நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட பட வாய்ப்புகளை கைவசம் வைத்திருக்கிறார் முதலாவதாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது விறுவிறுப்பாக கமலஹாசன் நடித்து வருகிறார்
அதனைத் தொடர்ந்து மணிரத்தினத்துடன் ஒரு படம் ஹச் வினோத்துடன் ஒரு படம் லோகேஷ் உடன் ஒரு படம் பண்ண இருக்கிறார். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் கமல் ஒரே ஒரு நடிகை உடன் நடிக்கும் போது மட்டும் பயந்து உள்ளார் அந்த தகவல் குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.. கமலின் நெருங்கிய நண்பரும் நடிகருமான கிரேசி மோகன் பேட்டியில் சொன்னது..
திரை உலகில் எத்தனையோ நடிகைகளுடன் ஜோடி போட்டு கமல் நடித்திருந்தாலும் ஊர்வசியுடன் நடிக்கும் பொழுது மட்டும் கமல் பயந்து நடித்துள்ளார். காரணம் அவரது நகைச்சுவையான நடிப்பு கமலையே வியக்க வைக்குமாம். அந்த அளவிற்கு ஊர்வசியின் நடிப்பு இருக்கும் இப்பொழுது கூட பல்வேறு படங்களில் தனது திறமையை காட்டி நடித்து அசத்தி வருகிறார்
கடைசியாக கூட ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான வீட்டுல விசேஷம் திரைப்படத்தில் கூட செம சூப்பராக நடித்து ரசிகர்கள் இடத்தில் கைத்தட்டல் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.