பிக்பாஸ் சீசன் 7-னை தொகுத்து வழங்க இருக்கும் கமல்.. எத்தனை கோடி சம்பளம் தெரியுமா.?

kamal hassan
kamal hassan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் 6வது சீசன் கலந்த கடந்த ஜனவரி 22ஆம் தேதி அன்று நிறைவடைந்தது மேலும் மற்ற சீசன்களை விட இந்த சீசனுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இதில் 15 ஆட்கள் கலந்துக் கொண்ட நிலையில் ஜிபி முத்து, அசல், ஷிவின் கணேசன், ராபர்ட், ஆயிஷா, ஷெரினா, மணிகண்ட ராஜேஷ், ரட்சிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி, கதிரவன், குயின்ஸி, நிவாஷினி, தனலட்சுமி, மைனா, நந்தினி உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் இந்த சீசனின் டைட்டிலை அசீம்  வெற்றி பெற்ற நிலையில் விக்ரமன் வின்னர் ஆப் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் 7வது சீசனுக்கான பணிகள் துவங்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில நடிகர் கமலஹாசன் இந்த சீசனைத் தொகுத்து வழங்குவதற்காக ரூபாய் 130 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சி வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் ஒளிபரப்பாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் கலந்துக் கொள்ளும் பிரபலங்களின் பட்டியலும் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய  திரைப்படத்தினை கமல் அவர்கள் தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.