தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர்களில் இருவர் அஜித் மற்றும் கமல். இவர்கள் இருவரும் இப்படி பிரபலமாக காணப்படுவதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான். இருவரும் சினிமாவில் எவ்வளவோ வெற்றி மற்றும் தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் இவர்களது ரசிகர்கள் ஒருபோதும் அவர்களை கைவிடுவதில்லை.
இருவரும் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் பல நல்ல குணங்கள் உடையவர்கள். சினிமாவை தாண்டியும் பல விஷயங்களில் சிறந்து விளங்கி வருகின்றனர். அந்த வகையில் அஜித் தற்போது தனது 61வது திரைப்படத்தில் நடித்த வருகிறார். இது தவிர அஜித் கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பலவற்றிலும் ஈடுபட்டு சாதனை படைத்து வருகிறார்.
இவரை தொடர்ந்து கமலும் விக்ரம் என்னும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார். பின்பு அடுத்ததாக இந்தியன் 2, தேவர்மகன் 2, சபாஷ் நாயுடு போன்ற படங்களில் நடிக்க உள்ளார். கமலஹாசனும் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து பாடகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பன்முகம் தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார்.
இந்த நிலையில் அஜித் கமலை பற்றியும் கமல் அஜித்தை பற்றியும் எப்பொழுதோ தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசி உள்ள செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் அஜித் கமல் குறித்து பேசியது “சினிமாவில் அவரது சாதனைகளையும், அவர் போட்ட உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை என்னால் கொடுக்கவே முடியாது” என்று கூறியுள்ளார்.
இதுபோன்று கமல் அஜித் குறித்து பேசியது “அஜித்துடன் பணிபுரிந்த யாரிடம் கேட்டாலுமே அஜித் ஒரு ஜென்டில்மேன் என்று தான் கூறுவார்கள், உண்மையிலேயே அஜித் ஒரு ஜென்டில்மேன் தான்” என பேசியுள்ளார். இந்த செய்தியை தற்போது சோசியல் மீடியாவில் அஜித் மற்றும் கமல் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றன