இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பல வெற்றி படங்களை தமிழ் சினிமா உலகிற்கு கொடுத்து உள்ளார் அதில் ஒரு படத்தை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. கே. எஸ். ரவிக்குமார் ஒரு கதையை எழுதிவிட்டார் என்றால் முதலில் ரஜினி கமல் இடம் தான் கூறுவார் அந்த கதைகளும் அவர்கள் இருவர்களில் யாருக்கு எனும் ஒருவருக்கு செட்டாகி விடும்.
அப்படிதான் நடிப்பிற்கு தீனி போடும் வகையில் “வரலாறு” படத்தின் கதையை எழுதிவிட்டு கமலஹாசன்னிடம் போய் கூறி இருக்கிறார் ஆனால் நடிகர் கமலுக்கு அந்த கதை பிடிக்காத காரணத்தினால் மற்றொரு கதையான தெனாலி திரைப்படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் கே எஸ் ரவிக்குமார் வரலாறு கதையை வைத்துக்கொண்டு சுத்த அது ரஜினிக்கு தெரிய வந்தது.
ஆனால் அந்த கதையை ரஜினியிடம் முதலில் சொல்லாமல் இருந்தார். படையப்பா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இருவரும் ஜக்கு பாய் படத்தில் இணைந்தனர். சில காரணங்களால் அந்த படத்தை கைவிட நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திரமுகி படத்தில் கே எஸ் ரவிக்குமார், ரஜினிக்கும் இணைந்தனர்.
மறுபக்கம் வரலாறு கதையை அஜித்திடம் சொல்லி சம்மதம் வாங்கினாராம் பிறகு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு பின் ரஜினியிடம் வரலாறு படத்தை போட்டு காண்பிக்கப்பட்டதாம் படத்தில் அஜித் நடிப்பை பார்த்து ரஜினி மெய்சிலர்ந்து போய் பாராட்டினாராம் மேலும் அஜித், ஷாலினியை வீட்டுக்கு வரவைத்து பாராட்டினாராம்..
இந்த படம் திரையரங்குகளில் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதாம் பிறகு தான் கமல் இப்படி ஒரு சூப்பரான கதையை தவற விடுவோமே என மனதிற்குள் நினைத்துக் கொண்டாராம். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.