பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இதுவரை எடுத்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான்.. இருப்பினும் அதில் ஒரு சில படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்துள்ளது அந்த வகையில் 1993 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் ஜென்டில் மேன்.
இந்த திரைப்படத்தில் அர்ஜுன் உடன் கைகோர்த்து கவுண்டமணி, நம்பியார், சரண்ராஜ், வினித், மனோரமா,செந்தில் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது இந்த படத்தை கே.டி. குஞ்சு மோகன் தயாரித்தார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்தார்.
படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இந்த திரைப்படம் நடிகர் அர்ஜுனுக்கான படமே கிடையாதாம் இயக்குனர் சங்கர் முதலில் ஜென்டில்மேன் படத்தின் கதையை கமலிடம் சொல்லி உள்ளார் ஆனால் அவர் அந்த கதையை மறுத்து விட்டாராம்..
காரணம் அப்பொழுது கமலுக்கு சொன்ன ஜென்டில்மேன் படத்தின் கதையே வேறு கதையாம்.. முதலில் இயக்குனர் ஷங்கர் கமலிடம் கூறியது.. பிராமண பிள்ளையாக நடிக்கும் கதாபாத்திரமாம். அதில் நடிக்க வேண்டுமென சொல்லி இருக்கிறார்கள் அது நடிகர் கமலுக்கு பிடிக்காமல் தான் மறுத்துவிட்டாராம்.
பிறகு நடிகர் அர்ஜுனிடம் இயக்குனர் ஷங்கர் ஜென்டில்மேன் படத்தின் அரசியல் கதை சொல்லி உள்ளார் அது அவருக்கு ரொம்ப பிடித்து போகவே படமாக உருவாகியது. அந்த படம் வெளிவந்த பிறகு தான் தெரியுமாம்.! கமலுக்கே ஷங்கர் தன்னிடம் சொன்ன கதை வேறு என்று.. இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கமலே வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.