Bigg boss 7 tamil season Kamal question to Jovika : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாகவே ஹைலைட் டாபிக்காக போய்க்கொண்டிருப்பது ஜோவிகா படிப்பு குறித்த கேள்விதான். ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு படிப்பு வரவில்லை அதனால் ஒன்பதாவது வகுப்போடு நின்றுவிட்டேன் என கூறினார்.
இது குறித்து பேசிய விசித்திரா 12ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக நீ படிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் ஜோவிகா நான் சினிமாவில் டிப்ளமோ வரை படித்துள்ளேன் என கூறியிருந்தார். அதற்கு பவா செல்லத்துரை நடிப்பில் கூட டிகிரி இருக்கிறது அதை நீ படிக்க வேண்டும் என அறிவுரை கூறியிருந்தார்.
தமிழில் புகுந்து விளையாடும் ஜோவிகா.. விசித்ராவிற்கு பதிலடி கொடுக்க வனிதாவிற்கு வீடியோ அனுப்பிய அப்பா
இப்படி போய்க்கொண்டிருந்த விவகாரம் தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து சொல்ல நீங்கள் யார் என ஜோவிகா வயதுக்கு மீறிய பேச்சை ஆரம்பித்தார் அது மட்டும் இல்லாமல் படிப்பு இருந்தால் தான் வாழ வேண்டும் என்று அவசியம் கிடையாது படிக்க முடியவில்லை என எத்தனையோ பேர் தவறான முடிவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
இப்படி ஜோவிகா எல்லை மீறி பேசிக் கொண்டிருக்கிறார் இதற்கு ஒரு எண்டு கார்டு கமல் போடுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் பூதகாரமாக வெடித்துள்ளது இதனைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசன் இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்து என்ன சொல்லப் போகிறார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் நிலையில் திடீரென ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது இந்த விவகாரம் குறித்து கமலஹாசன் கருத்து ஒன்றை கூறியுள்ளார் அவர் கேட்ட ஒரே ஒரு கேள்வி ஜோவிகாவை ஒரு நிமிடம் வாய் அடைத்து போய் நிற்கிறார்.
ஜோவிகாவுக்கு படிப்பு வரல.. ஆனா இதுல கில்லாடி.! உண்மையை உடைக்கும் வனிதா
அப்பொழுது ஜோவிகா அவர்களை பார்த்து கமலஹாசன் படிப்பு எப்பொழுதாவது முக்கியமில்லை என கூறி உள்ளீர்களா என கேட்டுள்ளார் அதற்கு ஒரு பதிலும் அளிக்காமல் ஜோவிகா அமைதியாக அமர்ந்திருந்தார். ஆனால் ஜோவிகா நான் அப்படி கூறியது கிடையாது என சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் கல்வி முக்கியமில்லை ஒருவர் வளர்ச்சிக்கு கல்வி இல்லாமலும் ஜெயிக்க முடியும் என்பது தான் ஜோவிக்காவின் வாதம்.
இந்த நிலையில் தொடர்ந்து பேசிய கமல் உசுர கொடுத்தாவது கல்வி முக்கியமில்லை நினைக்கிறவன் நான், குறைகளை சொல்லும் பொழுது உடனே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை பலருக்கு இருக்காது கற்றல் விதி இருக்கலாம் தவிர கற்றல் வதை இருக்கக் கூடாது என கமல் விசித்ரா மற்றும் ஜோவிகாவிற்கு சாட்டையடி பதில் கொடுத்துள்ளார்.