மீண்டும் தான் யார் என்பதை நிரூபித்த கமல் – “விக்ரம்” படம் வெளிவருவதற்கு முன்பாக பல கோடிகளை அள்ளி புதிய சாதனை.!

kamal
kamal

உலகநாயகன் கமலஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அந்த படங்களில் இவர் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது என கூறப்படுகிறதே எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டி எடுக்கும் கமல் சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் போனது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது சினிமாவில் நடிக்கவில்லை.

என்றாலும் மற்றவற்றிலும்  வெற்றி கண்டார் உலகநாயகன் கமலஹாசன் கதர் ஆடை நிறுவனம், சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, அரசியல் என அனைத்திலும் சிறப்பாக பயணித்தார். இதனால் சினிமா பக்கமே வர மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை கமலுக்கு ரொம்ப பிடித்துப் போகவே அந்த படத்தில் தயாரித்து நடிக்கவும் உள்ளார்.

விக்ரம் படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி  கோலாகலமாக உலக அளவில் பெரிதாக ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என மிகப்பெரிய ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். விக்ரம் படத்தில் இருந்து வெளிவந்த ட்ரைலர் பாடல் என அனைத்துமே மிரட்டும் வகையில் இருந்தது.

படம் வெளிவருவதற்கு முன்பாக பல்வேறு செய்திகளை பட குழு வெளியிட்டு சொல்லியும் வருகிறது.அந்த வகையில் “விக்ரம்” படத்தில் சூர்யா கடைசி பத்து அல்லது பதினைந்து நிமிட காட்சிகளில் தான் வந்து போவாராம் அப்படி பார்க்கையில் கமலைத் தொடர்ந்து அடுத்த பாகத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஒருபக்கம் தகவல்கள் வெளிவருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே சுமார் 200 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை வெளிவந்த கமலின் அனைத்து திரைப்படங்களின் வியாபாரத்தை விட விக்ரம் திரைப்படத்தின் வியாபாரம் அதிகம் என சொல்லப்படுகிறது.