தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து பல டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு சென்றார்.
மேலும் இணையதளத்திலும் பல கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் தன்வசப்படுத்தியவர். இப்படி நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வந்த கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் வெற்றி நடை கண்டு வருகிறது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது அதில் கமலஹாசன் கீர்த்தி சுரேஷை பாராட்டி இருப்பார். அவர் பேசியது கீர்த்தி சுரேஷ் புத்திசாலியான பெண் அறிவுமிக்க பெண் அழகு மட்டும் இருந்தால் போதாது..
அறிவும் இருக்க வேண்டும் அது கீர்த்தைக்கு நிறையவே இருக்கிறது என கூறியிருந்தாராம். இதுபோல் கமல் இதுவரை எந்த ஒரு நடிகையையும் பேசியதில்லை, அதனால் கீர்த்தியை இப்படி பேசியதற்கு பின்னணி காரணம் ஒன்று இருப்பது போல் தெரிகிறது என செய்யாறு பாலு கூறியிருக்கிறார். அதாவது கீர்த்தி ஒரு கவிஞரா மலையாளத்தில் பல கவிதைகளையும் எழுதி இருக்கிறாராம்..
அதோடு புத்தகங்கள் நாவல் போன்ற பலவற்றையும் தினந்தோறும் படித்து தனது பொழுதை கழிப்பவராம். இந்தப் பழக்கம் அந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவிற்கு இருந்தது. அந்தப் பழக்கத்தை தற்போதைய கீர்த்தி சுரேஷ் பயன்படுத்தி வருகிறார் இதை ஒருவேளை கமல் அறிந்திருப்பார் அதனால் தான் கீர்த்தியை மேடையில் பாராட்டினார் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.