தற்பொழுதெல்லாம் அனைத்து ஹீரோயின்களும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் சகஜமாக நடிப்பது மிகவும் எளிமையாக இருந்து வருகிறது அதுவும் முக்கியமாக லீப் லாக் காட்சிகள் மற்றும் கிளாமர் போன்றவை எல்லாம் சாதாரண ஒன்றாக இருந்து வரும் நிலையில் அனைவரும் அது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்வதில்லை மேலும் அது போன்று நடித்து வருவதனால் அதற்கான கூடுதல் சம்பளம் வாங்கு நடிகைகளும் இருக்கிறார்கள்.
மேலும் இது போன்ற காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது எனவே அனைத்து படங்களிலும் இது கட்டாயமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் இந்த காலகட்டத்தில் அது மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் 80 காலகட்டங்களில் முத்த காட்சிகள் மிகவும் அரிதான ஒரு விஷயம்.
பல நடிகைகள் இதனை முன்வந்து செய்ய மாட்டார்கள் அதே போல் நடிகர்களில் தயங்குபவர்களும் இருந்துள்ளார்கள். ஏன் என்றால் இதுபோன்ற கேரக்டரைகளில் நடித்து விட்டால் பெண்களின் மத்தியில் தனக்கென இருக்கும் ஆதரவு குறைந்துவிடும் என நினைப்பார்கள் ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தைரியமாக அது போன்ற காட்சிகளில் நடிக்க கூடிய ஒருவர் தான் கமலஹாசன்.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை கண்ட படம் தான் புன்னகை மன்னன். இந்த படத்தில் கமலஹாசனின் முதல் காதலி நடிகர் ரேகா நடித்திருந்தார் இவரை தொடர்ந்து நடிகை ரேவதி ஒரு தலை காதலியாக நடிக்க அதனை கமலும் ஏற்றுக் கொள்வார் நடிகை ரேகாவுடன் தற்கொலைக்கும் முயற்சி செய்யும் கமல் இருவரும் மலையிலிருந்து பிரிப்பதற்கு முன்பு ரேகாவை உதட்டில் முத்தமிடுவார்.
எனவே இதனைப் பற்றிய இப்படி ஒரு காட்சியை எடுக்கப் போகிறோம் என்று தன்னிடம் முன்பே சொல்லவில்லை என்றும் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது தான் கமல் தன்னை முத்தமிட்டதாகவும் சொல்லி அப்போது சர்ச்சையை கிளப்பினார். ரேகாவின் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ரேவதி தானாம் ரேவதியிடம் இந்த முத்த காட்சியைப் பற்றி சொன்ன பொழுது அவர் அது போன்ற கேரக்டரில் நான் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
எனவே கமலஹாசன் அந்த காட்சியை நீக்காமல் அதற்கு பதிலாக ரேவதியை நீக்கிவிட்டு ரேகாவை போட்டு இருக்கிறார். அதன் பிறகு ரேவதிக்கு மற்றொரு கேரக்டர் கொடுக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு ரேவதி வேண்டாம் என்று சொல்லிய காரணத்தினால் ரேகாவிடம் முத்த காட்சி சீனை எடுத்து படமாக்கி உள்ளார்கள். ரேவதியும் எந்த முன்னணி நடிகருடனும் இது போன்ற காட்சிகளில் நடிக்க கூடாது எனவும் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு கிளாமர் காட்சிகளில் நடிக்க கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார்.