54 வயதிலும் கமலுடன் நடிக்க கண்டிஷன் போடும் பிரபல நடிகை..! அவ்ளோ பயமா நம்ம தலைவர பார்த்தா..!

kamal-1
kamal-1

தமிழ் திரையுலகில் உலகநாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன். இவர் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது மற்றும் இந்தியன் 2 பஞ்சாயத்து என பல்வேறு வேலையாக பிசியாக இருந்ததன் காரணமாக திரை உலகில் அதிகம் முகம் காட்டாமல் இருந்தார்.

அந்த வகையில் சமீபத்தில் தான் லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் திரைப்படத்தில் நடிகர் கமல் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.  இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வேலை ஆரம்பித்த நிலையில் தற்போது அதற்கு முன்பாக பாபநாசம் இரண்டாம் பாகத்தை முடித்துவிடலாம் என பிளான் போட்டுள்ளாராம்.

மலையாளத்தில் இரண்டு பாகங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி கொடுத்த திரைப்படம்தான் த்ரிஷ்யம் இந்த திரைப்படத்தின் ரீ மேக்கில் தமிழில் வெளிவந்த திரைப்படம் பாபநாசம். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பல நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி போய்க் கொண்டிருந்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக இந்தமுறை கௌதமி நடிப்பது கிடையாதாம்.

இந்த திரைப்படத்தில் கௌதமிக்கு பதிலாக நடிகர் கமலுக்கு ஜோடியாக நதியா நடிக்க உள்ளாராம் அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் நடிப்பதற்கு நடிகை நதியா சில கண்டிஷன்கள் போட்டுள்ளாராம் அதாவது அவருடைய படத்தில் நடிக்க வேண்டுமென்றால் முத்தக்காட்சி ரொமான்ஸ் காட்சி சுத்தமாக இருக்க கூடாது என்று கூறியுள்ளாராம்.

nadhiya-1
nadhiya-1