நடிப்புக்கு பேர்போன உலகநாயகன் கமலஹாசன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதால் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவர் கமல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பொழுது பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் அரசியல் வியாபாரம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு ஓடுகிரார்.
இருந்தாலும் இவரது நடிப்பு திறமையின் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு வாய்ப்புகள் வந்தது ஒரு வழியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை கமலுக்கு பிடித்து போகவே உடனடியாக விக்ரம் படத்தில் ஒப்பந்தமானார் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு ஒரு வழியாக முடிந்து உள்ளது படம் வெகு விரைவிலேயே திரையரங்கில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களை கமலஹாசன் தயாரிக்கவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகை ஒருவர் கமல் குறித்து பேசியுள்ளார். அவர் வேறு யாருமல்ல அம்மா சித்தி போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த சுஜாதா சிவகுமார் தான் தற்போது குறித்து பேசியுள்ளார். உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தில் நடித்து அறிமுகமான முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பு திறமையை வெளி காட்டிய சுஜாதா சிவகுமாருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது. சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முக்கிய காரணம் கமல் என கூறியிருக்கிறார் நடிகை சுஜாதா சிவகுமார்.
கமல் யாரையும் தாழ்த்திப் பேசமாட்டார் தனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே மற்ற நடிகை,நடிகருக்கும் அந்த படத்தில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் இருக்க வேண்டும் என நினைப்பார். விருமாண்டி படத்தின் போது என்னுடைய நடிப்பைப் பார்த்து நீங்கள் நன்றாக நடிக்கிறார்கள் என கூறினார். அவர் சொன்ன பிறகுதான் சினிமா உலகில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
அதன் பின் சினிமாவில் சிறப்பான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினேன் என கூறினார். எடுத்துக்காட்டாக கூட சுஜாதா சிவகுமார் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன், பசங்க, விஜயுடன் சுறா, அஜித்துடன் விசுவாசம், வீரம் போன்ற பல்வேறு படங்களில் நடித்தஅடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகளையும் தற்போது கையில் வைத்திருக்கிறார்.