கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்.! கொடூரமான வில்லனா இருப்பாரோ

vikram
vikram

உலக நாயகன் கமல்ஹாசன் தற்பொழுது பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் திரையரங்குகளில் பாதிக்கு பாதி மிகவும் வெற்றிகரமாக ஓடியது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அந்த வகையில் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள் இவரது ரசிகர்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்கப் போகும் நடிகர் யார் என்று தெரியவந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து இந்த திரைப்படத்தை கமல் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இருந்து ஏதாவது ஒரு அப்டேட் விரைவில் வெளிவரும் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

pasil
pasil