நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர், இவர் தான் நடிக்கும் திரைப்படத்திற்காக அதே கதாபாத்திரமாக மாறி விடுவார் அந்த அளவு மிக சிறந்த நடிகர், அதனால் தான் இவரை உலக நாயகன் என அழைக்கிறார்கள்.
ஒரே திரைப்படத்தில் பல கெட்டப் போட்டு அசத்தியவர் இவர், கமலஹாசன் அன்றிலிருந்து இன்றுவரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடைசியாக கமலஹாசன் நடித்த திரைப்படம் தசவாதாரம் 2. தற்பொழுது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படம் முடிவடைந்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கமலஹாசன் உலகநாயகன் என்ற பெயர் எடுத்து இருந்தாலும் இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட திரைப்படங்கள் பல இருக்கின்றன.
அதன் முழு லிஸ்ட் கீழே வருமாறு
முதன் முதலில் கண்டேன் சீதையை என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் பின்பு சில காரணங்களால் அந்த திரைப்படம் நிறுத்தப்பட்டது, அதன்பிறகு லேடிஸ் ஒன்லி திரைப்படம், பிறகு மருதநாயகம் என்ற திரைப்படம் படப்பிடிப்பு பாதி நடைபெற்ற பிறகு நிறுத்தப்பட்டது, மருதநாயகம் திரைப்படம் எடுக்கப்படுமென கூறியிருந்தார்,
கபர்தார் சபாஷ் நாயுடு ஆகிய திரைப்படங்களும் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது அதனால் இந்த ஐந்து திரைப்படங்களும் திரைக்கு வராமல் பாதியிலேயே நிறுத்தப்பட்ட திரைப்படங்கள்.